Sridevi Bhoodevi Sametha Sri Thiruvenkatamudayan (Srinivasa Perumal
Thiruman
Arulalaperumal Emperumanar

SWAMY ARULALAPERUMAL EMPERUMANAR SANNATHI, SRIVILLIPUTTUR

ஸ்வாமி அருளாளப்பெருமாளெம்பெருமானார் சன்னதி,
ஸ்ரீவில்லிபுத்தூர்

திருவாழும் தென்னரங்கம் சிறக்க வந்தோன் வாழியே!

Home | SWAMY ARULALAPERUMAL EMPERUMANAR VAIBHAVAM | SWAMY THATHACHARIAR VAIBHAVAM | KARTHIGAI BHARANI UTHSAVAM |
KUPPAN IYENGAR MANDAPAM | V.K.S.SWAMY | DAILY EVENT AT SRI ANDAL SANNITHI | ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம்-வீடியோ |
KAAREI KARUNAI TRUST

ஸ்ரீதிருவேங்கடமுடையான் ஸ்ரீ அருளாளப்பெருமாளெம்பெருமானார் சன்னதி
மஹா ஸம்ப்ரோக்‌ஷணப் படங்கள்
Srivilliputtur Sri Priyalwar
Aani Swathi Brammothsavam
29.06.2011 To 12.07.2011.

ஸ்ரீமத்யை கோதாயை நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் தயாபாலமுநயே நம: ஸ்ரீமத் தாதார்ய குரவே நம:ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ திருவேங்கடமுடையான் ஸ்ரீஅருளாளப்பெருமாளெம்பெருமானார் சன்னதி

(குப்பனையங்கார் மண்டபம்)


மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவாந்தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என்பொரு கயல்கண்ணிணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த என் கோலக்கிளியை
உன்னொடு தோழமை கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக்கூவாய் !

ஸ்ரீ ஆண்டாள்.

தேனார் கமலத் திருமாமகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் – மானிடர்க்கா
இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால உறும்.

ஸ்ரீ அருளாளப்பெருமாளெம்பெருமானார்.

ராமாநுஜ பதாம்போஜ ஸம்ச்ருதம் குணவாரிதிம்
தயாபாலமுநிம் வந்தே வேதாந்த பரிநிஷ்டிதம்

ஸ்ரீயப்பதியான எம்பெருமான் சகல ஆத்மாக்களிடத்திலும் கருணையுடையவனாய் இருக்கிறான். ஆயினும், ஆசார்யர்கள் அவனைவிட மிக்க அருள் கொண்டவர்கள். இவ்வுண்மையை மதுரகவியாழ்வார் “சடகோபன் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கது” என்று அருளிச்செய்தார். அதனால்தான் சர்வேஸ்வரனும் ஆசார்யனாக இருக்கும் இருப்பை ஆசைப்பட்டு கீதோபதேசம் செய்து “கீதாசார்யனாக” ஆனான். ஆனாலும் ஸ்ரீராமாநுஜராய் அவதாரம் செய்து அருளிய “எம்பெருமானார்க்கு” நிகர் ஆசார்யர் வேறு யாருமே இல்லை எனலாம். ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் “ஆசார்யர்” என்ற சொல்லுக்கு நேர் பொருளாக விளங்குபவர் “ஸ்வாமி எம்பெருமானார்” ஒருவரே. மற்றவர்களுக்கு ஆசார்யர்கள் என்ற வழக்கு, இவருடைய சம்பந்தத்தாலும், நியமனத்தாலுமே ஏற்பட்டதாகும்.

எல்லாவற்றிலும் உயர்ந்தது “சரமபர்வநிஷ்டை” அதாவது “ஆசார்யனையே எல்லாமாகப் பற்றியிருப்பது”. இந்நிலையில் நின்று நடத்திக்காட்டியவள் “ஸ்ரீ ஆண்டாள்”. அவள் அவதரித்த ஸ்தலம் “ஸ்ரீவில்லிபுத்தூர்”. இதே சரமபர்வ நிஷ்டையில் ஊன்றிய ஸ்ரீஅருளாளப்பெருமாளெம்பெருமானார்க்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிலும் ஸ்ரீஆண்டாள் சன்னதிக்கு வலப்பக்கத்தில் சன்னதி அமைந்து, ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார், பெரியபெருமாள், பெரியாழ்வார் மண்டகப்படிக்காக எழுந்தருள்வது மிகவும் விசேஷமானது.

ஸ்ரீபூமிநீளா ஸமேத ஸ்ரீநிவாசப்பெருமாள்-திருவேங்கடமுடையான், நம்மாழ்வார், உடையவர், அருளாளப்பெருமாளெம்பெருமானார் ஆகியோர் மூலவராகவும், ஸ்ரீ அருளாளப்பெருமாளெம்பெருமானார், தாதாசாரியார்(அருளாளப்பெருமாளெம்பெருமானாரின் திருப்பேரனார்) ஆகியோர் உத்ஸவராகவும் இங்கு எழுந்தருளியுள்ளனர்.

கடந்த 1994ம் ஆண்டு எந்தையார் கீர்த்திமூர்த்தி, அருளிச்செயல்வல்லான், ஸ்ரீசூக்திசதுரர், ஸ்ரீஅருளாளப்பெருமாளெம்பெருமானாரின் 32வது திருவம்சியராய் ஆசார்ய பீடத்தை அலங்கரித்த ஸ்ரீ.உ.வே.வி.கே.ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமியின் சீரிய முயற்சியால், ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீபெரும்பூதூர் ஸ்ரீ.உ.வே.வரத எதிராஜ ஜீயர் ஸ்வமியின் தலைமையில் மஹாஸம்ப்ரோக்‌ஷணம் நடைபெற்றது.

அதன் படங்களை இங்கே காணலாம்.

samprokshanam1994


தற்பொழுது, சன்னதியின் திருமதிள், கல்மண்டபம், முன்மண்டப மேல்கூரை,சன்னதி கோபுரம், சன்னதி விமானம் மற்றும் சன்னதி கர்ப்பக்ரஹம் ஆகியவற்றில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்து பகவத் பாகவத ஆசார்ய அநுக்ரஹத்தை முன்னிட்டு 26.06.2011 அன்று ஸம்ப்ரோக்‌ஷணம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கு அங்கமாக 22.06.2011 அன்று காலை மஹா சுதர்ஸன ஹோமம் நடைபெற்றது. வானமாமலை ஸ்ரீ.உ.வே.என்.எஸ்.க்ருஷ்ணன் ஸ்வாமி தலைமையில், ஆசுகவி ஸ்ரீ.உ.வே.கோவிந்தராஜ ஐயங்கார் ஸ்வாமி தொடங்கி வைக்க பாஞ்சராத்ர ஆகம வித்வான் ஸ்ரீ.உ.வே.சத்யநாராயணன் ஸ்வாமி மஹா சுதர்ஸன ஹோமத்தை நடத்தினார்.

அதன் படங்களை இங்கே காணலாம்.
22-06-2011-Morning-Sudharsana Homam


22.06.2011 அன்று மாலை ஸ்ரீவில்லிபுத்துர் ஸ்ரீஆண்டாள் சன்னதி ஸ்தானீகம், பாஞ்சராத்ர ஆகம வித்வான் ஸ்ரீ.உ.வே.சத்யநாராயணன் ஸ்வாமி மற்றும் திருக்கோஷ்டியூர் பாஞ்சராத்ர ஆகம வித்வான் ஸ்ரீ.உ.வே.பாபு ஸ்வாமி ஆகியோர் இணைந்து ம்ருத்ஸங்க்ரஹணம்,அங்கூரார்பணம், யாகசாலை வைபவங்களைத் தொடங்கி வைத்தனர்.

முதல் நாள் வைபவம் படங்களை இங்கே காணலாம்.

22-06-2011-evening-angurarpanam thodakkam
23.06.2011 - ஸம்ப்ரோக்‌ஷணத்தின் இரண்டாம் நாள் ஸ்ரீமத் வேதமார்க்கப்ரதிஷ்டாபநாசார்யராய் உபயவேதாந்தாசார்யராய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபெரும்பூதூர் ஸ்ரீ.உ.வே.கோவிந்த எதிராஜ ஜீயர் ஸ்வாமி எழுந்தருளி கோஷ்டிக்குத் தலைமை ஏற்றார். ஸ்ரீவில்லிபுத்தூர் மூத்த அத்யாபகர், வானமாமலைமடம் ஸ்ரீகார்யம் ஸ்ரீ.உ.வே.சாமு ஐயங்கார் ஸ்வாமி கோஷ்டியார் சார்பாக ஜீயர் ஸ்வாமியை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றார். ஸ்ரீ.உ.வே. டாக்டர்.மா.வரதராஜன் ஸ்வாமியின் உபன்யாசம் நடைபெற்றது.

இரண்டாம் நாள் வைபவங்களை இங்கே காணலாம்.

23-06-2011-2nd day of Samprokshanam
24-06-2011- மூன்றாம் நாள் அருளிச்செயல், வேதபாராயண வைபவங்கள் சிறப்பாக நடைபெற்றது. அவற்றை இங்கே காணலாம்.

From 24-06-2011-3rd day of samprokshanam


25-06-2011- நான்காம் நாள் காலை வைபவங்கள் அருளிச்செயலுடன் தொடங்கியது. சாற்றுமுறையில் திருமாளிகை சிஷ்யர்கள் கலந்து கொண்டனர். மாலை கர்மாங்க ஸ்நபந திருமஞ்சனம் நடைபெற்றது. ஸ்ரீமான்.அருளாளனும், ஸ்ரீமான் ஸ்ரீவத்ஸனும் உற்சாகத்துடன் ஆசார்ய திருமஞ்சன கைங்கர்யத்தில் ஈடுபட்டதைக் காணலாம். வாத்தியார் ஸ்வாமி ஆசுகவி ஸ்ரீ.உ.வே.கோவிந்தராஜ ஐயங்கார் ஸ்வாமியின் உபன்யாசமும் நடைபெற்றது. அந்த வைபவங்களின் படங்களை இங்கே காணலாம்.

25062011


26-06-2011 ஐந்தாம் நாள் அதாவது மஹா ஸம்ப்ரோக்‌ஷண நன்னாள். அன்று காலை 5.00 மணிக்கு வைபவங்கள் மங்கள வாத்தியத்துடன் தொடங்கியது. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ.உ.வே.டி.ஆர்.விஜயராகவாசாரியார் ஸ்வாமி சுப்ரபாதம் சேவித்தவுடன் யாகசாலை மற்றும் அருளிச்செயல் கோஷ்டி ஆரம்பமானது. திருப்பல்லாண்டு, திருப்பாவை,திருமொழி 11ம்பத்து, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், கண்ணிநுண்சிறுத்தாம்பு, திருவாய்மொழி 10ம் பத்து, இராமாநுச நூற்றந்தாதி, ஞானசாரம், ப்ரமேயசாரம், உபதேசரத்தினமாலை ஆகியவை சேவிக்கப்பட்டது. யாகசாலை பூர்த்தியாகி, பூர்ணாகுதி உபசாரங்களை ஸ்ரீமத்....ஜீயர் ஸ்வாமி தலைமையில், ஸ்ரீ.உ.வே.விஞ்சிமூர் ஸ்ரீரங்காசாரியார் ஸ்வாமி எழுந்தருளப்பண்ணிவர, திருமாளிகை சிஷ்யர்கள் பின் தொடர்ந்து பிரதக்‌ஷிணமாக யாகசாலை வந்தடைந்தனர். பின்னர் மஹா பூர்ணாகுதி நடைபெற்றது. ஏராளாமான ஸ்ரீவைஷ்ணவர்கள் அருளிச்செயல் கோஷ்டியாக,வேதபாராயண கோஷ்டியாக, ஆண்டாள் கோஷ்டியாக, பாகவத கோஷ்டியாக சன்னதி முழுவதும் நிரம்பியிருந்தனர். யாத்ராதானம் ஆகி, ஸ்ரீமத்...ஜீயர் ஸ்வாமி முன்வகிக்க கடம் புறப்படு ஆனது. சரியாக 10.10 மணிக்கு விமானத்தில் ஸ்ரீமத்....ஜீயர் ஸ்வாமி ப்ரோக்‌ஷிக்க, மஹா ஸம்ப்ரோக்‌ஷணம் சிறப்பாக நடைபெற்றது. 10.40க்கு காரம்பசு, கன்யாபெண் முன் நிற்க, திருக்கதவு திறக்கப்பட்டு கற்பூர ஹாரத்தியும் அதைத்தொடர்ந்து திருவாரதனமும் நடைபெற்றது. பிறகு, ஸ்ரீஆண்டாள் சன்னதியிலிருந்து ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த பூமாலையும், உடுத்துக்களைந்த பீதகவாடையும் ஸ்ரீஆண்டாள் சன்னதி ஸ்தானீகம் ஸ்ரீமான். ரமேஷ் எழுந்தருளப்பண்ணிவர, ஸ்ரீஆண்டாள் சன்னதி அர்ச்சகர் ஸ்ரீமான்.பண்ணையார் பத்ரிபட்டர் அதைப் பெருமாளுக்குச் சாற்றினார். ஸ்ரீஆண்டாள் பிரசாதம் பெருமாள் பிரசாதமுமாகி, அதை ஸ்ரீஅருளாளபெருமாளெம்பெருமானாருக்கு ஸ்ரீமான் சத்யநாராயணன் ஸ்வாமி சாற்றினார். திருவல்லிக்கேணியிலிருந்து ஸ்ரீமான் ரகுராம் ஸ்வாமி எழுந்தருளப்பண்ணி வந்த ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளின் மாலை பிரசாதங்களையும் சாற்றினார். பின்னர், அக்‌ஷதை ஆசிர்வாதம், பெரிய சாற்றுமுறை கோஷ்டி - வேத, இதிகாச, புராணாதி அருளிச்செயல் சாற்றுமுறை கோஷ்டி இனிதே நிறைவுற்றது. முக்கிய பிரமுகர்களுக்கு ஸ்ரீமத்....ஜீயர் ஸ்வாமி கெளரவம் செய்தார். தீர்த்த ப்ரசாத கோஷ்டியுடன் அனைத்து கோஷ்டியினருக்கும் ததீயாராதனையும் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த ஸ்ம்ப்ரோக்‌ஷண வைபவத்தில் முக்கியமான (ஹைலைட்) சில விஷயங்கள் :

1. அங்கூரார்ப்பண நிகழ்ச்சி
2. ஸ்ரீமத் எதிராஜ ஜீயர் ஸ்வாமி எழுந்தருளியது
3. அருமையான அருளிச்செயல் கோஷ்டி,
4. வேதபாராயண் சாற்றுமுறை (சாமவேத கானம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது)
5. ஸ்ரீமதி முகுந்தவல்லியின் அயராத ஆசார்ய கைங்கர்யம்
6. ஸம்ப்ரோக்‌ஷணத்தன்று நிரம்பிவழிந்த சன்னதி.

இக்கோஷ்டியில், பல திவ்யதேசங்களிலிருந்து அன்வயித்த அத்யாபக ஸ்வாமிகளுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சன்னதி அத்யாபக ஸ்வாமிகளுக்கும், ஸ்ரீஆண்டாள் சன்னதி அர்ச்சக,பரிசாரக ஸ்வாமிகளுக்கும், வேதபாராயாண ஸ்வாமிகளுக்கும், இச்சன்னதி ஜீர்ணோத்தாரணத்திற்கும், பாலாலய மற்றும் மஹா ஸம்ப்ரோக்‌ஷ்ண வைபவத்திற்கும், பொருளுதவியும், திரவியம் மற்றும் சரீரோபகாரமும் செய்த திருமலை விஞ்சிமூரார் ஸ்வாமிகளுக்கும், தனவந்தர்களுக்கும், திருமாளிகை சிஷ்யர்களுக்கும், அடியேனது க்ருதக்ஞதையை தலையல்லால் கைமாறிலேன் என்று தெரிவித்துக்கொண்டு மேன்மேலும் பல கைங்கர்யங்களை ஆசார்யன் திருவடிகளில் ப்ரார்த்திக்கிறேன்.

தாஸன்,
திருமலை விஞ்சிமூர். ஸ்ரீநிவாஸ வெங்கடாசாரியார்.
VKS SWAMY
VKS VENKATACHARIAR SWAMY

KEERTHI MOORTHY
SRI.U.VE. V.K.SRINIVASACHARIAR SWAMY
CHITHIRAI - MOOLAM

SITE DEVELOPED IN MEMORY OF
Our beloved father KEERTHI MOORTHY SRI.U.VE.Vinjimoor

V.K.Srinivasachariar Swamy
 
 
Vinjimoor S.Sampath,
Vinjimoor S.Sundar Rajan,
Vinjimoor S.Venkatachariar

We Welcome your valuable feedback/suggestions


View My Guestbook
Sign My Guestbook


SRI.U.VE.VIDWAN
SIROMANI
V.S.VENKATACHARIAR SWAMY
KARTHIGAI - MRUGASHEERSHAM